/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
/
நீலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ADDED : டிச 31, 2025 05:16 AM
சூலூர்: புதிதாக உருவாக்கப்பட்ட நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக, தியாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சூலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை இரண்டாக பிரித்து, நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. கடந்த 24ம் தேதி ஸ்டேஷன் திறக்கப்பட்டது. ஒரு எஸ்.ஐ., மற்றும் 19 போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த தியாகராஜன், நீலம்பூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோல், சூலூர் இன்ஸ்பெக்டராக இருந்த செல்வராகவன், செட்டிபாளையம் ஸ்டேஷனுக்கும், அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த, பிரேம் ஆனந்த் சூலூருக்கும் மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர்.

