/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையோர ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தது தடை
/
மலையோர ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தது தடை
மலையோர ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தது தடை
மலையோர ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்தது தடை
ADDED : டிச 31, 2025 05:17 AM
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி, தடாகம் வட்டாரங்களில் உள்ள ரிசார்ட்டுகளில் பலத்த ஒலி, ஒளியுடன் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, தடாகம் போலீசார் தடை விதித்துள்ளனர்.
கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் ஆனைகட்டி, சின்ன தடாகம் வட்டாரங்களில் புற்றீசல் போல ஏராளமான சட்டவிரோத ரிசார்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கு அடிக்கடி நடக்கும் இரவு நேர பார்ட்டிகளில் அதிக ஒலி எழுப்புவதும், லேசர் லைட் பயன்படுத்துவதும், அதிகரித்து உள்ளன.
இதனால் அப்பகுதியில் நடமாடும் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் எழுப்பினர்.
ரிசார்ட்டுகளுக்கு, இரவு நேரங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பறக்கும் நபர்களால் அடிக்கடி விபத்தும், அதனால் உயிரிழப்பும் ஏற்படுகின்றன.
பிரச்னைக்கு தீர்வு காண, தடாகம் போலீசார் தினம்தோறும் மாங்கரை, ஆனைகட்டி, கணுவாய் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுப்புற சூழலை பாதிக்கும் வகையில், இன்று இரவு ஆனைகட்டி, சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை ரிசார்ட் நிர்வாகத்தினர் செய்யக்கூடாது என, தடாகம் போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக ரிசார்ட் நிர்வாகத்தினரிடம் போலீசார் உறுதிமொழி பத்திரம் பெற்றுள்ளனர்.

