/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் புகார்
/
நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் புகார்
ADDED : செப் 10, 2025 10:10 PM

மேட்டுப்பாளையம்; காரமடை நகராட்சி கமிஷனர் மதுமதியிடம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சி அலுவலகத்தில், காரமடை வார சந்தை சுங்க கட்டணம் உயர்வு, கடைகள் தொடர்பான விலை பட்டியல் உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடப்பதாக, நகராட்சி தலைவர் உஷா சார்பில் கவுன்சிலர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது .
இதையடுத்து கவுன்சிலர்கள் அலுவலகம் வந்தனர். ஆனால் தி.மு.க. வை சேர்ந்த நகராட்சி தலைவர் உஷா, தனக்கு வேண்டப்பட்ட சில கவுன்சிலர்களுடன், தனி நபர்கள் சிலரை வைத்து கூட்டம் நடத்துவதாக தெரிய வந்தது.
இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் குருபிரசாத், தியாகராஜன், ரேவதி, கமல்குமார், கண்ணப்பன், ரங்கசாமி, அமுதவேனி, சாந்தி, கவிதா, நித்யா, மலர்கோடி, சித்ரா, அனிதா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி கமிஷனர் மதுமதியிடம், மனு அளித்தனர்.
அதில் முறையாக அரசு அதிகாரிகளையும், கவுன்சிலர்களையும் வைத்து கூட்டம் நடத்த வேண்டும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலைப்பட்டியலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என கூறியிருந்தனர்.-