/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே நாளில் 68 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது
/
ஒரே நாளில் 68 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது
ஒரே நாளில் 68 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது
ஒரே நாளில் 68 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது
ADDED : செப் 10, 2025 10:09 PM

அன்னுார்; ஒரே நாளில் 68 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப் பட்டது.
அன்னுார் பேரூராட்சியில், 300க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இவை குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோரை துரத்தி துரத்தி கடிக்கின்றன. கூட்டம், கூட்டமாக திரிந்து மக்களை அச்சுறுத்துகின்றன.
இதையடுத்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்பு, முதல் கட்டமாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் பிடித்து 76 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, நேற்று, அல்லிகுளம், ஜனனி கார்டன், சாணாம்பாளையம், சாலைபாளையம், குன்னத்தூராம்பாளையும் ஆகிய ஐந்து இடங்களில் 68 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது. கால்நடை மருத்துவர் ஜெயக்குமாரி கூறுகையில், நாய்களை கட்டி போட்டு வளர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். இத்துடன் பிறநோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியும் தவறாமல் போட வேண்டும், என்றார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், மேற்பார்வையாளர் வடிவேல் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.