ADDED : செப் 12, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:லஞ்சம் வாங்கி கைதான ஊராட்சி செயலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம் பாளையம் ஊராட்சி செயலர் முத்துசாமி, 48. கோட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் ராஜ், 42. காகிதப்பை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், தன் மனை விக்கு சொந்தமான வீட்டு மனையை வரன்முறைப்படுத்த, கொண்டையம்பாளையம் ஊராட்சியில் விண்ணப்பித்தார். முத்துசாமி பேரம் பேசி, 10,000 ரூபாய் தரும்படி கேட்டார்.
விக்ரம் ராஜா ரசாயனம் தடவிய பணத்தை முத்துசாமியிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு துறையினர் மறைந்திருந்து முத்துசாமியை கையும், களவுமாக பிடித்தனர். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முத்துசாமியை சஸ்பெண்ட் செய்து, எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.