/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி சாம்பியன்
/
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி சாம்பியன்
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி சாம்பியன்
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளி சாம்பியன்
ADDED : செப் 11, 2025 10:14 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே நடந்த குறுமைய விளையாட்டுப் போட்டிகளில், மாணவிகள் பிரிவில், எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதிக வெற்றி புள்ளிகளை எடுத்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் காரமடை அடுத்த புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 66வது குடியரசு தின, குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, 50 பள்ளிகளில் இருந்து, 475 மாணவிகள் பங்கேற்றனர். இதில், தடகளம் உள்பட, 14 வகை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளில், மாணவிகள் பிரிவில் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 130 வெற்றி புள்ளிகள் எடுத்து, முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பள்ளியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலர் ஜெயக்கண்ணன், பள்ளி முதல்வர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.