/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிபாடு நடத்தி பா.ஜ.,வினர் உற்சாகம்
/
வழிபாடு நடத்தி பா.ஜ.,வினர் உற்சாகம்
ADDED : செப் 10, 2025 10:12 PM

சூலுார்; துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், வெற்றி வாகை சூடினார். இதை கொண்டாடும் வகையில், சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கினர். ஒன்றியத்தின் முன்னாள் நிர்வாகிகள் அசோக், ரவிச்சந்திரன், ரவிக்குமார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. கந்தசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், சத்தியமூர்த்தி, பரமசிவம், நகர செயலாளர் பிரகாஷ், ரேவதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.