/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மத்திய சிறை வளாக கட்டுமான பணிகள் விறுவிறு! 18 மாதங்களில் முடிக்க திட்டம்
/
புதிய மத்திய சிறை வளாக கட்டுமான பணிகள் விறுவிறு! 18 மாதங்களில் முடிக்க திட்டம்
புதிய மத்திய சிறை வளாக கட்டுமான பணிகள் விறுவிறு! 18 மாதங்களில் முடிக்க திட்டம்
புதிய மத்திய சிறை வளாக கட்டுமான பணிகள் விறுவிறு! 18 மாதங்களில் முடிக்க திட்டம்
ADDED : செப் 10, 2025 10:12 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையம் ரோட்டில் புதிய மத்திய சிறைச்சாலை கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவையில் தற்போது உள்ள மத்திய சிறைச்சாலை, 1872ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில், 165 ஏக்கரில் நிறுவப்பட்டது. இங்கு செம்மொழி பூங்காவை அமைப்பதற்காக, மாநில அரசு முழு பகுதியையும் கையகப்படுத்தி உள்ளது.
இதனால் சிறைச்சாலை வளாகம் கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் ரோட்டில், 97 ஏக்கர் பரப்பில் புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் கட்டப்படுகிறது.
இதற்காக ஒன்னிபாளையம் ரோட்டில், 500 மீட்டர் தொலைவில் இருபுறமும் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு, 211.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. கட்டுமான பணிகள் கடந்த மே மாதம் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு புதிய மத்திய சிறைச்சாலையின் கட்டுமான பணிகள் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டம், 2500 ஆண் கைதிகள் தங்க வைக்க கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மருத்துவமனை, நிர்வாக அலுவலகம், சுற்றுச்சுவர், கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு, கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அத்துடன், 111 பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அடங்கும். இரண்டாம் கட்டத்தில் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை கட்டப்படுகிறது. இதில், 500 பெண் கைதிகள் தங்க வைக்க கட்டுமான பணி துவக்கப்படும். தற்போது கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
தற்போது உள்ள ஒன்னிபாளையம் சாலையில் போக்குவரத்து தொடர்ந்து அனும திக்கப்பட்டு வருகிறது. புதிய சிறைச்சாலைக்கான சுற்றுச்சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின், ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து சிறை வளாகத்திற்கு முன் வலதுபுறம் போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது.
இது மலையடிவாரத்தை நோக்கி சுமார், 430 மீட்டர் பயணித்து பின்னர் இடது புறம் கிழக்கு சிறைச்சாலைக்கும், மலைக்கும் இடையில் சுமார், 700 மீட்டர் பயணித்து மீண்டும், 430 மீட்டர் இடதுபுறம் பயணித்து ஏற்கனவே உள்ள ஒன்னிபாளையம் ரோட்டுக்கு திரும்பும்.
புதிய மத்திய சிறைச்சாலை வளாகம், 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகிறது.