/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்தில் தனியார் பார் அகற்ற கோரி பொதுமக்கள் மனு
/
கோவில் நிலத்தில் தனியார் பார் அகற்ற கோரி பொதுமக்கள் மனு
கோவில் நிலத்தில் தனியார் பார் அகற்ற கோரி பொதுமக்கள் மனு
கோவில் நிலத்தில் தனியார் பார் அகற்ற கோரி பொதுமக்கள் மனு
ADDED : செப் 10, 2025 10:13 PM
சூலுார்; கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் செயல்படும் தனியார் பாரை அகற்ற கோரி, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் அளித்த மனு விபரம் :
அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையம், கொள்ளுப்பாளையம், சங்கோதிபாளையம் ஆகிய ஊர்களுக்கு மத்தியில் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான பூமி, அவிநாசி ரோட்டின் அருகே உள்ளது. கோவில் கமிட்டியை சேர்ந்த சிலர், கோவில் பூமியை, தனியார் பார் அமைக்க கொடுத்துவிட்டனர். இதையறிந்து ஊர் பொதுமக்கள் கோவில் கமிட்டியின் மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும், பார் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பாரில் சட்டவிரோதமாக, முறைகேடாக மது விற்று வந்ததாக புகார் எழுந்ததால், பாரை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனால், கோவில் நிலத்தில் உள்ள பாரை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது. பாரை நிரந்தரமாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.