/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மண்டல பல்கலை வாலிபால் இன்று துவக்கம்
/
தென்மண்டல பல்கலை வாலிபால் இன்று துவக்கம்
ADDED : டிச 15, 2025 04:26 AM
சென்னை: தென்மண்டல வாலிபால் போட்டி, செங்கல்பட்டில் இன்று துவங்குகிறது.
இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டி இன்று துவங்குகிறது.
போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது. போட்டியில், தென்மண்டல அளவிலான 100 பல்கலை அணிகள் 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோத உள்ளன.
இப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், 21 - 24ம் தேதிகள் வரை, இதே இடத்தில் நடக்கும் அகில இந்திய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெறும் என, எஸ்.ஆர்.எம்., பல்கலையின் உடற்கல்வித்துறை இயக்குநர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.

