/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிக்கடி டிப்பர் லாரிகள் 'மக்கர்': சாலை சீரமைப்பு பணியில் தொய்வு
/
அடிக்கடி டிப்பர் லாரிகள் 'மக்கர்': சாலை சீரமைப்பு பணியில் தொய்வு
அடிக்கடி டிப்பர் லாரிகள் 'மக்கர்': சாலை சீரமைப்பு பணியில் தொய்வு
அடிக்கடி டிப்பர் லாரிகள் 'மக்கர்': சாலை சீரமைப்பு பணியில் தொய்வு
ADDED : டிச 15, 2025 04:25 AM
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் மண்டலத்தில், நான்கு மாநகராட்சிக்கு உட்பட்ட டிப்பர் லாரிகள் உள்ளன. இவை, சாலையோர மண், கற்களை அகற்றுவது, சாலை பள்ளத்தை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நான்கு லாரிகளும், அடிக்கடி பழுதடைகின்றன. இதனால், பள்ளம் விழுந்த சாலை சீரமைப்பு, சாலையோர மண் அகற்றுவது போன்ற பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு லாரி ஒவ்வொரு வாரமும் பிரேக், கேபிள் என, எதாவது ஒரு பழுது ஏற்பட்டு ஒதுக்கி விடப்படுகிறது.
இதனால், மெட்ரோ ரயில், வடிகால், கால்வாய் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால், அடிக்கடி சாலையை சுத்தம் செய்ய வேண்டிய பணிகள் முடங்குகின்றன. பணி செய்யாமல் இருக்க, ஊழியர்கள் பழுது ஏற்படுத்தி ஓரம் கட்டுகின்றனரா என விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.