ADDED : டிச 15, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாப்பூர்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் மாடவீதியில் நேற்று முன்தினம் இரவு, ஆட்டோ ஒன்று ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வந்தது.
அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் இவ்வழியில் வரக்கூாடது என, தெரிவித்தார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் தொடர்ந்து நிறுத்தாமல் வந்ததால், அவரை தடுக்கும் விதமாக பெண் போலீஸ், ஆட்டோவில் தாவி ஏறினார்.
இருந்தும் ஆட்டோவை நிறுத்தாததால், அங்கிருந்தவர்கள் சேர்ந்து ஆட் டோவை மடக்கி பிடித்தனர். பின் ஆட்டோ ஓட்டுநரை மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

