/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழமையான வாரிய குடியிருப்பு: ரூ.2.59 கோடியில் சீரமைப்பு
/
பழமையான வாரிய குடியிருப்பு: ரூ.2.59 கோடியில் சீரமைப்பு
பழமையான வாரிய குடியிருப்பு: ரூ.2.59 கோடியில் சீரமைப்பு
பழமையான வாரிய குடியிருப்பு: ரூ.2.59 கோடியில் சீரமைப்பு
ADDED : டிச 15, 2025 04:25 AM
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையில் 55 ஆண்டுகள் பழமையான வீடுகள், 2.59 கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகிறது.
அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, வெங்கடாபுரம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், தலா 270 சதுர அடி பரப்பு கொண்ட, 836 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள், 1970 முதல் 1990ம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டவை.
இதில், மிகவும் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க, 2.59 கோடி ரூபாய் வாரியம் ஒதுக்கியுள்ளது. இருதினங்களுக்கு முன் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் பணி துவங்கியது. இதில், உதிர்ந்த சுவரில் பூச்சு பணி, படிக்கட்டுகள் சீரமைப்பு, கழிவுநீர் குழாய் புதுப்பிப்பு, வர்ணம் பூச்சு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. மொத்த பணிகளை, இன்னும் மூன்று மாதத்தில் முடிக்கும் வகையில், வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.