/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஐ.டி., கூடைப்பந்து சென்னை அணி வெற்றி
/
ஐ.ஐ.டி., கூடைப்பந்து சென்னை அணி வெற்றி
ADDED : டிச 19, 2025 05:25 AM

சென்னை: சென்னையில் நடக்கும் ஐ.ஐ.டி.,க்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில், நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில், சென்னை ஐ.ஐ.டி., அணி வெற்றி பெற்றது.
சென்னை, திருப்பதி மற்றும் ஹைதராபாத் ஐ.ஐ.டி.,க்கள் இணைந்து, ஐ.ஐ.டி.,க் களுக்கு இடையிலான, 58வது ஆண்டு விளையாட்டு போட்டிகளை, கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடத்துகின்றன.
இதில், நாட்டின் ஐ.ஐ.டி.,க்களைச் சேர்ந்த, 1,000க்கும் அதிக மான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் உட்பட, பல்வேறு விளையாட்டு போட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஆடவருக்கான கூடைப்பந்து போட்டி யில், சென்னை ஐ.ஐ.டி., அணி, கோவா ஐ.ஐ.டி. அணியை 69 - 32 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
அடுத்து நடந்த மகளிர் ஸ்குவாஷ் போட்டியில், சென்னை ஐ.ஐ.டி., அணி, காந்திநகர் ஐ.ஐ.டி., அணியை, 3 - 0 என்ற நேர் செட்டில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

