/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை கண்காட்சி துவக்கம்
/
கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை கண்காட்சி துவக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை கண்காட்சி துவக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை கண்காட்சி துவக்கம்
ADDED : டிச 19, 2025 05:26 AM

சென்னை: மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனை கண்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
நுங்கம்பாக்கம், அன்னைத் தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுய உதவி குழு விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
உணவு திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட திட்ட இயக்குநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, அரங்குகளை பார்வையிட்டார்.
பின், உதயநிதி கூறுகையில், ''நடப்பு நிதியாண்டில், மகளிர் சுய உதவி குழு தயாரித்த பொருட்களை, 600 கோடி ரூபாய்க்கு விற்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது வரை, 690 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. நிதியாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், விற்பனை மேலும் உயரும்,'' என்றார்.
கண்காட்சியில், சுய உதவிக் குழுவினர் தயாரித்த இயற்கை சார்ந்த பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, சிறுதானிய உணவு வகைகள், மூலிகைப் பொருட்கள், மண்பாண்டம், கைத்தறி துண்டு, வேட்டி, சேலை உட்பட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், கிராமிய பாரம்பரிய உணவு விற்பனைக்காக ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி ஜன., 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை பார்வையிடலாம்.

