/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால்வாய் மூடியை உடைத்து பள்ளத்தில் சிக்கிய லாரி
/
மழைநீர் வடிகால்வாய் மூடியை உடைத்து பள்ளத்தில் சிக்கிய லாரி
மழைநீர் வடிகால்வாய் மூடியை உடைத்து பள்ளத்தில் சிக்கிய லாரி
மழைநீர் வடிகால்வாய் மூடியை உடைத்து பள்ளத்தில் சிக்கிய லாரி
ADDED : டிச 19, 2025 05:24 AM

வளசரவாக்கம்: மினி லாரியின் பாரம் தாங்காமல் மழைநீர் வடிகால்வாய் உடைந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெற்குன் றம், மேட்டுக்குப்பத்தில் இருந்து வளசரவாக்கத்தில் நடக்கும் கட்டட பணிக்கு, மினி லாரியில் நேற்று காலை மண் ஏற்றி வரப்பட்டது.
வளசரவாக்கம் மண்டல அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சாலையில் சென்றபோது, அங்கு குடிநீர் வாரிய பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.இதையடுத்து, ஓட்டுநர் இடதுபுறமாக லாரியை இயக்கினார். அப்போது, மழைநீர் வடிகால் மீது லாரி ஏறியது. இதில், பாரம் தாங்காமல் மழைநீர் வடிகால்வாயின் மேல் மூடி உடைந்து, லாரியின் பின் சக்கரம் உள்ளே போனது.
இதையடுத்து, லாரி ஒரு புறம் சரிந்து நின்றது. இதையடுத்து, 'கிரேன்' வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தால், அப்பகுதியை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.