/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் மாற்றி வேலி கம்பியால் ஆபத்து
/
மின் மாற்றி வேலி கம்பியால் ஆபத்து
ADDED : டிச 23, 2025 05:11 AM

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட மண்டலங்களில், விபத்து மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்கும் விதமாக மின்மாற்றியை சுற்றி, இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், மின்மாற்றியை சுற்றி குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாதுகாப்பு வேலியில், அரசியல் கட்சியினர் உட்பட பலர் போஸ்டர்கள் ஒட்டி சேதப்படுத்தினர். இது புது தலைவலியாக மாறியது.
போஸ்டர் ஒட்டுவதை தடுக்கும் பொருட்டு, இரும்பு வேலிக்கு மேல் பூக்கள் போன்று அலங்கார கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பிகள், பாதுகாப்பு வேலிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பது சரியாக தெரியவில்லை.
இதன் காரணமாக, மாநகர பேருந்துகளில் தொங்கியபடி செல்பவர்கள், மின்மாற்றியின் பாதுகாப்பு வேலியின் அலங்கார பூக் கம்பிகளில் சிக்கி காயமடைய வாய்புள்ளது.
குறிப்பாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பெரியார் நகர் - திருவொற்றியூர் பேருந்து நிலையம் இடைப்பட்ட துாரத்தில், ஆகாஷ் மருத்துவமனையருகே இருக்கும் மின்மாற்றிக்கான பாதுகாப்பு வேலி அமைந்துள்ள இடத்தில், சாலை குறுகலாக இருப்பதால், வாகன ஓட்டிகளை அலங்கார கம்பிகள் பதம் பார்க்க வாய்ப்பு உள்ளது.
சம்ந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.

