/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் பணியாளரை திட்டிய அதிகாரியை கண்டித்து வாணிப கழகத்தில் போராட்டம்
/
பெண் பணியாளரை திட்டிய அதிகாரியை கண்டித்து வாணிப கழகத்தில் போராட்டம்
பெண் பணியாளரை திட்டிய அதிகாரியை கண்டித்து வாணிப கழகத்தில் போராட்டம்
பெண் பணியாளரை திட்டிய அதிகாரியை கண்டித்து வாணிப கழகத்தில் போராட்டம்
ADDED : டிச 19, 2025 05:27 AM

சென்னை: பெண் பணியாளரை திட்டிய, தமிழக நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து, சென்னை தலைமை அலுவலகத்தில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில், தமிழக நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் செயல்படுகிறது.
அங்கு, நிர்வாக பிரிவு பொது மேலாளராக உள்ள ராதாகிருஷ்ணன், பெண் பணியாளரை தகாத வார்த் தையில் திட்டியதாகக் கூறி, அதைக் கண்டித்து, பல சங்கங்களின் பணியாளர்கள், பெண் பணியாளர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் நேற்று, நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலக வாசலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, வாணிப கழக அனைத்து பணியாளர்கள் மற்றும் சுமைதுாக்கும் பணியாளர்கள் பொதுநல சங்க பொதுச்செயலர் தாமஸ் கூறியதாவது:
பொது மேலாளர் ராதா கிருஷ்ணன், பணியாளர்களை விடுமுறை நாட்களிலும் வருமாறு கூறுகிறார். பணி நாட்களில் இரவு, 11:00 மணி வரையிலும் பணி செய்ய நிர்பந்தம் செய்கிறார்.
பெண் பணியாளர்களை அதிக நேரம் நிற்க வைத்து, தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். ராதாகிருஷ்ணன் மீது பல முறை புகார் தெரிவித்தும், உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களிடம் தவறான வார்த்தைகளை பயன் படுத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

