/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய யோகாசனம் 160 பல்கலைகள் பங்கேற்பு
/
அகில இந்திய யோகாசனம் 160 பல்கலைகள் பங்கேற்பு
ADDED : டிச 19, 2025 05:13 AM
சென்னை: அகில இந்திய யோகாசன போட்டியில், நாடு முழுதும் இருந்து, 160 பல்கலைகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவில், வேல்ஸ் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான யோகாசன போட்டி, பல்லாவரத்தில் நேற்று துவங்கியது.
இதில், பாரம்பரிய யோகாசனம் தனிநபர், அணி, ஆர்ட்டிஸ்டிக் யோகாசனம் தனிநபர், ரதம் தனிநபர் ஆகிய நான்கு பிரிவுகளில், பல்கலை வகையாக போட்டிகள் நடந்தன.
அதேபோல், சூர்ய நமஸ்காரம் உள்ளிட்டவையும் நடக்கின்றன. பாரம்பரிய சுற்றில், ஒவ்வொரு ஆசனத்திற்கும், புள்ளிகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
போட்டியில், தென்மாநில அளவில் வெற்றி பெற்ற அணிகள் உட்பட, நாடு முழுதும் இருந்து, 160 பல்கலைகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
ஐந்து நாட்கள் நடக்கும் இப்போட்டியின் முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

