/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில டி - 20 கிரிக்கெட் செங்கல்பட்டு அணி அபாரம்
/
மாநில டி - 20 கிரிக்கெட் செங்கல்பட்டு அணி அபாரம்
மாநில டி - 20 கிரிக்கெட் செங்கல்பட்டு அணி அபாரம்
மாநில டி - 20 கிரிக்கெட் செங்கல்பட்டு அணி அபாரம்
ADDED : டிச 19, 2025 05:14 AM
சென்னை: மாவட்டங்களுக்கு இடையிலான டி - 20 கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான எஸ்.எஸ்.ராஜன் டி - 20 கிரிக்கெட் தொடர், பல்வேறு மாவட்ட மைதானங்களில் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளத்தில் நேற்று நடந்த போட்டியில், செங்கல்பட்டு அணி, புதுக்கோட்டை அணியை எதிர்த்து மோதியது. டாஸ் வென்ற செங்கல்பட்டு அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த புதுக்கோட்டை அணி வீரர்கள், சொற்ப ரன்களில் வெளியேறினர். அதனால், ஆட்டத்தின் முடிவில், 11.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து, 56 ரன்களில் சுருண்டது.
செங்கல்பட்டு அணி சார்பில், பிரஷித் ஆகாஷ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், சஞ்சீவ் குமார் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின், 57 என்ற எளிய இலக்கை துரத்தி களம் இறங்கிய செங்கல்பட்டு அணியில் துவக்க ஆட்டக்காரர் விக்னேஷ் ஐயர் 47 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு காரணமானார். முடிவில், செங்கல்பட்டு அணி 5 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 59 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

