/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு முதல்வர் துவக்கி வைப்பு
/
விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு முதல்வர் துவக்கி வைப்பு
விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு முதல்வர் துவக்கி வைப்பு
விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 01, 2025 01:40 AM
புதுச்சேரி : விவசாயிகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வேளாண்துறை சார்பில், நபார்டு வங்கி நிதியுதவியுடன், விவசாயிகளுக்கு புதிய ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டில், கியூ ஆர் கோடு மூலம், துறை அலுவலர்கள், இதர சேவையாளர்கள், பயனாளிகளின் தரவுகளை எளிதாக அறிய முடியும். மேலும், இந்த கார்டில் பாதுகாப்பு அம்சமாக, ஹோலோ கிராம் ஸ்டிக்கருடன் வடிவடைக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையை, புதுச்சேரியில் உள்ள 20 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, நேற்று சட்டசபையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், செயலர் நெடுஞ்செழியன், வேளாண்துறை இயக்குனர் ஜாகீர்உசேன், நபார்டு வங்கி புதுச்சேரி மாவட்ட அபிவிருத்தி மேலாளர் சித்தார்த்தன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.