/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் அல்லாத படிப்புக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் வெளியீடு; ஒவ்வொரு சுற்றுகளாக சென்டாக் அதிகாரிகள் விளக்கம்
/
நீட் அல்லாத படிப்புக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் வெளியீடு; ஒவ்வொரு சுற்றுகளாக சென்டாக் அதிகாரிகள் விளக்கம்
நீட் அல்லாத படிப்புக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் வெளியீடு; ஒவ்வொரு சுற்றுகளாக சென்டாக் அதிகாரிகள் விளக்கம்
நீட் அல்லாத படிப்புக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் வெளியீடு; ஒவ்வொரு சுற்றுகளாக சென்டாக் அதிகாரிகள் விளக்கம்
ADDED : ஜூலை 01, 2025 01:38 AM

புதுச்சேரி: முதற்கட்ட கணினி கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவர்கள், விரும்பிய கல்லுாரிகளில் சீட்டினை தேடும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைமுறைகளை சென்டாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெரிட் லிஸ்ட் வெளியாகியுள்ள சூழ்நிலையில் கலை அறிவியல், வணிகவியல், பி.டெக்., உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளான முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்க சென்டாக் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தப்படும். மருத்துவ படிப்பு கனவு தகர்ந்த மாணவர்கள், இன்ஜினியரிங், துணை மருத்துவ படிப்புகளில் என அடுத்த வாய்ப்புகளை தேடுவர்.
ஆனால், தற்போது இன்ஜியரிங் உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளுக்கு முதலில் கவுன்சிலிங் நடைமுறைகள் துவங்கியுள்ளதால், தங்களுக்கு கிடைத்த சீட்டினை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். கிடைக்கும் சென்டாக் சீட்டினை நிராகரித்து விடலாமா அல்லது சீட்டுயினை எடுத்துக்கொண்டு கல்லுாரியில் சேரலாமா என்றும் ஏகப்பட்ட குழப்பங்களுடன் நீட் அல்லாத கவுன்சிலிங்கை எதிர்நோக்கியுள்ளனர்.
இம்மாணவர்களுக்காக கவுன்சிலிங் நடைமுறைகள் பற்றி சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:
சென்டாக் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக ஐந்து நடைமுறை வாய்ப்புகள் கண் முன்னே உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்பட்டால் முதலில் அலார்ட்மெண்ட் கடிதத்தை டவுண்லோடு செய்து கொண்டு கல்லுாரிக்கு சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
கல்லுாரிகளிடம் அனைத்து ஒரிஜனல் சான்றிதழ், கட்டணத்தை செலுத்தி சேர வேண்டும். அந்த கல்லுாரியில் சீட் கிடைத்தை உறுதி செய்து கொண்டு அட்மிஷன் சிலிப்பினை பெற்று கொண்டு சேர்த்து விடலாம். இனி எந்த கல்லுாரியும், படிப்பும் எனக்கு தேவையில்லை. அந்த படிப்பிலேயே தொடருகிறேன் என்று முடிவு செய்தால் அடுத்த ரவுண்ட் கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவையில்லை.
இரண்டாவது வாய்ப்பினை பொருத்தவரை, மேற்கூறிய அதே நடைமுறைகளை பின்பற்றி கல்லுாரி சேர்ந்துவிடலாம். தற்போது ஒதுக்கப்பட்ட படிப்பு பிடிக்கவில்லையென்றால் இரண்டாவது ரவுண்டில் கல்லுாரி, பாடப்பிரிவுகளை முன்னுரிமை கொடுத்து விட்டு, புதிய கல்லுாரி அல்லது விரும்பிய சீட் கிடைப்பதற்காக காத்திருக்கலாம்.
மூன்றாவது வாய்ப்பினை பொருத்தவரை, முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லுாரி, சீட் பிடிக்கவில்லையென்றால், அந்த சீட் தேவையில்லை என்று நிராகரித்துவிடலாம். இதற்காக கல்லுாரிக்கு சென்று ரிப்போர்ட் செய்ய தேவையில்லை. இம்மாணவர்கள் அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதில் எந்த பிரச்னையும் இல்லை.
நான்காவது வாய்ப்பு என்பது, முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைக்காதவர்களுக்கானது. இவர்கள் அடுத்த இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க காத்திருப்பதை தவிர வேறு வழியே இல்லை.
ஐந்தாவது வாய்ப்பு இருமனது உடையவர்களுக்கு. சென்டாக்கினை தவிர்த்து மற்ற தனியார் கல்லுாரிகளில் சீட்டினை புக் செய்து இருப்பவர்களுக்கானது. இவர்கள் சீட் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு சேர விருப்பம் இல்லையென்றால் எந்த சுற்று கவுன்சிலிங்கிலும் பங்கேற்காமல் வெளியேறி விடலாம்.
இருப்பினும் எந்த சுற்று சென்டாக் கணினி கலந்தாய்வு என்றாலும், சீட் ஒதுக்கி, அலார்மெண்ட் கடிதம் கிடைத்த பிறகு, அதனை டவுண்லோடு செய்து கொண்டு இடம் கிடைத்த கல்லுாரியில் கண்டிப்பாக 'ரிப்போர்ட்' செய்ய வேண்டும். அப்படி ரிப்போர்ட் செய்யவில்லையென்றால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள சீட் தானாகவே கேன்சலாகிவிடும். இவ்வாறு சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.