தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் வரும் 11ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் வரும் 11ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் வரும் 11ம் தேதி துவக்கம்


UPDATED : டிச 09, 2023 12:00 AM

ADDED : டிச 09, 2023 04:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2023 12:00 AM ADDED : டிச 09, 2023 04:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, நாளை மறுதினம் துவங்குகிறது.புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி, இந்திராநகர், இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பார்வையிட்டனர். அதேபோல பொதுமக்கள் தரப்பில், 272 பேர் பார்வையிட்டுள்ளனர்.கண்காட்சியின் இரண்டாம் நாளான, நேற்று காலை 10:00 மணிக்கு, மதிப்பீட்டாளர்கள் குழு, மாணவ - மாணவியரின் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதில் மாணவர் பிரிவில், 387 படைப்புகளில் சிறந்த 40 படைப்புகளும், ஆசிரியர் பிரிவில், 36 படைப்புகளில், சிறந்த 15 படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டன.இதில் மண்டல அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள், வரும் 11ம் தேதி துவங்கும், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சி வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரோ, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி, துணை முதல்வர் சந்திரன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us