பஸ் படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
பஸ் படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துமா?
UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 11:13 AM
கச்சிராயபாளையம்:
கச்சிராயபாளையம் அடுத்த செல்லம்பட்டு, எடுத்தவாய்நத்தம், தாவடிபட்டு கிராமங்களில் இருந்து கச்சிராயபாளையம் வழியாக கள்ளக்குறிச்சி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.இப்பகுதியில் இருந்து கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களில் பலர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.குறிப்பாக பஸ் உட்பகுதியில் இடமிருந்தாலும் மாணவர்கள் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்கின்றனர். டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள், மாணவர்களை உள்ளே போக அறிவுறுத்தினாலும் அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.இதனால், படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டு கொள்வதில்லை. மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை, காவல் துறையினர் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
