தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வீட்டு கழிவுகளால் நுண் பிளாஸ்டிக் மாசு: ஐ.ஐ.டி., ஆராய்ச்சியில் தகவல்

வீட்டு கழிவுகளால் நுண் பிளாஸ்டிக் மாசு: ஐ.ஐ.டி., ஆராய்ச்சியில் தகவல்

வீட்டு கழிவுகளால் நுண் பிளாஸ்டிக் மாசு: ஐ.ஐ.டி., ஆராய்ச்சியில் தகவல்


UPDATED : டிச 09, 2023 12:00 AM

ADDED : டிச 09, 2023 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2023 12:00 AM ADDED : டிச 09, 2023 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வீட்டு கழிவுகளால், நுண் பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.நுண் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் சிவில் இன்ஜினியரிங் துறையின், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள இன்ஜினியரிங் பிரிவு பேராசிரியை இந்துமதி தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இந்த ஆராய்ச்சி முடிவு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடியிருப்புகளில் தினமும் நடக்கும் செயல்பாடுகளான பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், குளித்தல் போன்றவற்றால் வெளியேறும் கழிவுநீரில், நுண் பிளாஸ்டிக் துகள்கள் வருகின்றன.பாத்திரம் கழுவ பயன்படும் பிளாஸ்டிக் பட்டைகள், நாட்கள் செல்ல செல்ல தேய்ந்து, நுண் பிளாஸ்டிக்குகளை உதிர வைக்கிறது. துணிகளை துவைக்கும் போது, மைக்ரோ பைபர்கள் வெளியேறுகின்றன.மேலும், ஷவர் ஜெல், முகப்பூச்சு கிரீம், பற்பசை போன்றவற்றில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் சேர்மானங்கள் கழிவுநீரில் கலக்கின்றன. முகக்கவசங்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் செயற்கை தரை விரிப்புகள் போன்றவற்றிலும், நுண் பிளாஸ்டிக் உதிர்ந்து, சுற்றுச்சூழல் மாசுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us