இந்துஸ்தான் கல்வி நிறுவனம் கனடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இந்துஸ்தான் கல்வி நிறுவனம் கனடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
UPDATED : செப் 19, 2025 12:00 AM
ADDED : செப் 19, 2025 09:18 AM
கோவை:
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் கனடா பிளாக்பெரி க்யூ.என்.எக்ஸ். எவ்ரிவேர் எனும் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, சேலம் இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி ஆகிய வளாகங்களில், க்யூ.என்.எக்ஸ். எவ்ரிவேர் பிரத்யேக மையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2.5 கோடி ரூபாயில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிறப்பு மையம் அமைய உள்ளது. இம்மையம் வாயிலாக, தொழில்துறை தொடர்பான திறன் மேம்பாடு, பயிற்சிகள், தொழில்நுட்ப பயிற்சி, ஹேக்கத்தான், வேலைவாய்ப்பு பயிற்சி என பல்வேறு சாராம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்த, இந்துஸ்தான் கல்லுாரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன், டீன் முனிராஜ் ஆகியோரை கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி, இணை செயலாளர் பிரியா ஆகியோர் பாராட்டினர்.