குப்பைக்கிடங்கு செயல்பாடு; மாணவர்களுக்கு எம்.பி. விளக்கம்
குப்பைக்கிடங்கு செயல்பாடு; மாணவர்களுக்கு எம்.பி. விளக்கம்
UPDATED : செப் 19, 2025 12:00 AM
ADDED : செப் 19, 2025 09:19 AM
கோவை:
கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை வெள்ளலுாரில் மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து உரமாக்கும் மையத்தை, எம்.பி. ராஜ்குமார் நேற்று ஆய்வு செய்தார். மையத்தின் செயல்பாடுகள் குறித்து, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு வாயிலாக, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் தேர்வு செய்யப்பட்ட 11 மாணவ, மாணவியருக்கு விளக்கினார்.
எம்.பி. ராஜ்குமார் கூறியதாவது:
ஒரு நாளைக்கு சேகரமாகும் குப்பை, மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
இம்மாணவர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் அனுமதி பெற்று, இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள, ஒரு மாதம் என்னுடன் பயணிக்க உள்ளனர்.
மக்களை சந்திப்பது, மேற்கொள்ள உள்ள நலப்பணிகள், மக்கள் நலப்பணிக்காக எம்.பி. நிதியை செலவிடுவது, ஆய்வு பணி மேற்கொள்வது குறித்து அறிந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்த அறிக்கையை, என்னிடமும், கல்லுாரி நிர்வாகத்திடமும், யங் இந்தியன்ஸ் அமைப்பிடமும் மாணவ, மாணவியர் வழங்குவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'யங் இந்தியன்ஸ்' அமைப்பு, இளைஞர்களி ன் தலைமைத்துவம், தொழில்முனைவு மற்றும் சமூகப் பொறுப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி நகர் நல அலுவலர் பூபதி உட்பட பலர் உடனிருந்தனர்.