ADDED : ஆக 15, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹேண்ட்வாரா பகுதியில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நம் ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து கலாமாபாதின் வஜிஹாமா பகுதியைச் சுற்றி வளைத்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பாகிஸ்தானை தளமாக வைத்து செயல்படும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் மூவரை, பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அவர்கள் முகமது இக்பால் பன்டித், 23 , சஜாத் அஹ்மத் ஷா, 26, மற்றொருவர் இஷ்பாக் அகமது மாலிக், 22, என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.