போராட்டத்தில் கோஷ்டி கானம்; பயந்து பின்வாங்கியது காங்கிரஸ்
போராட்டத்தில் கோஷ்டி கானம்; பயந்து பின்வாங்கியது காங்கிரஸ்
ADDED : ஆக 17, 2025 09:13 AM

ஓட்டு திருட்டால், பா.ஜ., வெற்றி பெற்றது' என, காங்கிரசின் ராகுல் புகார் எழுப்பியுள்ளதோடு, இது தொடர்பாக போராட்டமும் நடத்தி வருகிறார்; இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதனிடையே, 'காங்கிரஸ் தான் ஓட்டு திருட்டு நடத்தியுள்ளது' என, பா.ஜ.. எதிர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. கர்நாடக அமைச்சராக இருந்த ராஜண்ணா, 'இந்த ஓட்டு திருட்டு விவகாரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஈடுபட்டது' என கூறியுள்ளார்; இதனால் இவரது அமைச்சர் பதவி பறிபோனது.
தேர்தல் ஆணையம், இண்டி கூட்டணி தலைவர் களை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தது. அதிக பட்சமாக, 30 பேர் அடங்கிய குழு வர அனுமதி அளித்தது. ஆணையம்.
'சந்திக்க வருகிறோம்' என, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அனுப் பினார்; விரைவில் யார் யார் பங்கேற் பர் என்ற பட்டியலை அனுப்புவதாக வும் கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.
ஆனால், கடைசி வரை அந்த பட்டி யல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப் பப்படவே இல்லை; இதனால் தேர்தல் ஆணையம் -இண்டி கூட்டணி கூட் டம் நடைபெறவே இல்லை.
காங்கிரசுக்குள் பல கோஷ்டிகள். இந்த கோஷ்டி தலைவர்கள், தாங் களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க விருப்பப்பட்டனர்.
கூட்டணி கட்சியினரும், அதிக அளவில் இந்த பட்டிய லில் இடம் பெற விரும்பினர். குறிப்பாக, தி.மு.க.,விலிருந்து கனிமொழி கோஷ்டி, உதயநிதி கோஷ்டி எம்.பி.,க்களும் குழுவில் இருக்க வேண்டும் என, காங்கிரசிடம் கூறினராம். மற்ற கூட்டணி கட்சிகளும் பெரிய பட்டியலை காங்கிரசுக்கு அளித்ததாம்.
'இப்படி அனைத்து கோஷ்டியினரையும் சேர்த்துக் கொண்டு போனால், 50 பேருக்கு மேல் ஆகிவிடும். எதற்கு வீண் பிரச்னை... தேர்தல் ஆணைய சந்திப்பே வேண்டாம்; தெருவில் இறங்கி போராடுவோம்' என சொல்லிவிட்டாராம் ராகுல். இப்படி கோஷ்டி கானத்தால், தேர்தல் ஆணையத்தை சந்திக்காமலேயே இருந்துவிட்டது, இண்டி கூட்டணி.