பரபரப்பான டில்லி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு
பரபரப்பான டில்லி தேர்தலில் பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு
ADDED : ஆக 17, 2025 09:05 AM

டில்லியில் பார்லிமென்டிற்கு அருகே உள்ளது, 'கான்ஸ் டிடியூஷன் கிளப்!' இதில் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். மிகவும் பவர் புல் கிளப் இது. இம்மாதம் 12ம் தேதி இந்த கிளப்பிற்கு தேர்தல் நடைபெற் றது. செயலர் பதவிக்கு, பா.ஜ.,வின ருக்குள்ளே மோதல். பா.ஜ., - எம். பி., ராஜிவ் பிரதாப் ரூடியும், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான, சஞ்சீவ் பால்யான் போட்டியிட்டனர்.
இந்த கிளப்பில், 1,295 உறுப்பினர் கள் உள்ளனர். சட்டசபை தேர்தல் போல, இங்கு தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. ரூடி, தாக்கூர் சமூகத் தைச் சார்ந்தவர். சஞ்சய் பால்யான் உ.பி., மாநிலத்தின் ஜாட் இனத்தைச் சார்ந்தவர். இதனால், இந்த சாதாரண கிளப் தேர்தலிலும் ஜாதி அரசியல் விளையாடியது.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, காங்கிரசின் சோனியா உட்பட பல வி.ஐ.பி.,க்கள் ஓட்டளித்தனர். கடை சியில், ராஜிவ் பிரதாப் ரூடி, சக கட்சியினரான சஞ்சீவை, 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ரூடியின் வெற்றி, டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூடியை பா.ஜ., தலைவர் களுக்கு குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பிடிக்காது. இதனால், அமித் ஷா உட்பட பல சீனியர் அமைச் சர்கள், ரூடிக்கு எதிராக வேலை செய்தனர்.
அதே சமயம் சோனியா உட்பட பல காங்., மற்றும் 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் ரூடிக்கு ஆதரவாக செயல்பட்டு, அவருக்கு ஓட்டளித்தனர்; சில பா.ஜ., எம்.பி.,க்களும் ரூடிக்கு ஆதரவளித்தனர். 'தேர்தல் முடிவு அமித் ஷாவிற்கு பெரும் பின்ன டைவு. இது, அமித் ஷாவின் தோல்வி' என்கின்றனர் சில பா.ஜ., - எம்.பி.,க்கள்.