ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரர் வீரமரணம்
ADDED : செப் 20, 2025 10:06 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
அப்போது ராணுவ வீரர் பலத்த காயம் அடைந்து வீரமரணம் அடைந்தார். மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.