sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! அதன் அம்சங்கள், எப்படி விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

/

வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! அதன் அம்சங்கள், எப்படி விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! அதன் அம்சங்கள், எப்படி விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! அதன் அம்சங்கள், எப்படி விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

8


ADDED : செப் 20, 2025 10:27 AM

Google News

8

ADDED : செப் 20, 2025 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய இ-பாஸ்போர்ட் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது, ஒரு சில மையங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டாலும், விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

இந்திய குடிமக்களுக்கு மின்னணு பாஸ்போர்ட் (இ-பாஸ்போர்ட்) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இந்த புதிய வகை இ-பாஸ்போர்ட் சேவையை கடந்த ஏப்ரல் 1, 2024ல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. அச்சேவை தற்போது நாடு முழுவதும் குறிப்பிட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வரும் மாதங்களில் இந்த சேவையை மற்ற அலுவலகங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட்களிலிருந்து இந்த இ-பாஸ்போர்டை வேறுபடுத்திக் காட்ட, இதன் முன் அட்டையில், தலைப்புக்குக் கீழே ஒரு சிறிய தங்க நிற சின்னம் அச்சிடப்பட்டிருக்கும்.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன


வழக்கமான பாஸ்போர்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ்போர்ட்டில் வழக்கமான பாஸ்போர்ட்டில் உள்ள அம்சங்களும், கூடவே டிஜிட்டல் அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த இ-பாஸ்போர்ட்டின் அட்டையில், ரேடியோ அதிர்வெண் அடையாள சிப் (RFID) மற்றும் அன்டெனா ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. இந்த சிப் வாயிலாக கைரேகை, டிஜிட்டல் புகைப்படம், பெயர், பிறந்ததேதி, பாஸ்போர்ட் எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அட்டையின் வெளிப்புறம் பாஸ்போர்ட் தலைப்பின் கீழ், ஒரு சிறிய தங்க நிற சின்னத்தை பார்க்க முடியும்.

வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, பாதுகாப்பை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சர்வதேச பயண செயல்முறையை மென்மையாகவும் திறமையாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மேம்பட்ட பதிப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளையும் இது குறைக்கிறது.

எப்படி விண்ணப்பிக்கலாம்


இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை, வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதை போன்றே உள்ளது.

* அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்குச் செல்லவும்.

* புதிய கணக்கைப் பதிவு செய்து, இ-பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

* உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவைத் தேர்ந்தெடுக்கவும்.

* ஆன்லைன் மூலம் இ-பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தவும்.

* நீங்கள் தேர்ந்தெடுத்த மையத்தில் நேர்காணலுக்கான (Appointment) நேரத்தை முன்பதிவு செய்யவும்.






      Dinamalar
      Follow us