ADDED : ஆக 03, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:புதுடில்லி, கோவிந்த்புரியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு, வாடகை வீட்டில் தங்கி இருந்த, ஐவரி கோஸ்ட் மற்றும் நைஜீரிய நாடுகளைச் சேர்ந்த பெர்னாடின், 39, எசிக்கில், 33, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தங்கி இருந்த வீடுகளில் இருந்து, 36 கிராம் கோகைன் மற்றும் 61 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதைப் பொருள், எட்டு மொபைல் போன்கள் மற்றும் 10,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அனுமதி இன்றி இருவரும் டில்லியில் தங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரிடமும் விசாரணை நடக்கிறது.