
21,500
ஒ டிஷாவின் பகுடாவில் 21,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய துறைமுகம் கட்டுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், பிரதமர் மோடி முன்னிலையில் இன்று கையெழுத்தாக உள்ளது.
ஒடிஷாவின் பாராதீப் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் சாகர்மாலா பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து ஒடிஷா அரசு துறைமுகத்தை அமைக்கிறது. 15 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2,085
ஹை தராபாத் பெருநகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்திடம் இருந்து 2,085 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை கைப்பற்றி இருப்பதாக ராம்கி இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நேற்று அந்நிறுவன பங்கு விலை, 2.25 சதவீதம் உயர்வு கண்டது. கோதாவரி ஆற்றில் இருந்து குடிநீரை, ஹைதராபாத் நகருக்கு வினியோகிக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம், ராம்கி இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தின் துணை நிறுவனமான மல்லண்ணசாகர் வாட்டர் சப்ளை வாயிலாக நிறைவேற்றப்பட உள்ளது.
5,000
நா ட்டின் பல்வேறு இடங்களில், பேட்டரி தயாரிப்பு, மூன்று கிகாவாட் சோலார் செல் ஆலை உட்பட பல்வேறு துாய ஆற்றல் திட்டங்களுக்கு 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக கொல்கட்டாவை சேர்ந்த சி.இ.எஸ்.இ., நிறுவனம் அறிவித்து உள்ளது.
தன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான சி.இ.எஸ்.இ., கிரீன் பவர் நிறுவனம் வாயிலாக திட்டங்களை நிறைவேற்ற உள்ளது. இந்த முதலீட்டை பங்குகள், வங்கி ஆகியவற்றின் வாயிலாக திரட்ட திட்டமிட்டுள்ளது.