ADDED : செப் 20, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சிறுசேரி சிப்காட் தொழில் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள, ஈக்வினிக்ஸ் நிறுவன தகவல் தரவு மையத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஈக்வினிக்ஸ் நிறுவனம், வணிகங்களுக்கான சர்வதேச இணைப்பு தீர்வுகள் வழங்கும் முன்னணி டிஜிட்டல் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பல்வேறு நாடுகளில் இந்நிறுவனத்தின் தகவல் தரவு மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
ஏ.ஐ., மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு உகந்த உள்கட்டமைப்பை வழங்கும் வகையில், ஈக்வினிக்ஸ் நிறுவனம், சிறுசேரியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில், நவீன தகவல் தரவு மையத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக, 574 கோடி ரூபாயை, அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்த தகவல் தரவு மையத்தை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.