ADDED : செப் 20, 2025 12:18 AM

சென்னை:எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், 'ஏர் கம்ப்ரசர்' உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'டிமான்ட் - மேட்ச்' என்ற நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜ் கூறினார். அவர் அளித்த பேட்டி:
ஏர் கம்ப்ரச ரில் மாற்றங்கள் ஏன் தேவை?
ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கம்ப்ரஸ் செய்யப்பட்ட காற்று நான்காவது அடிப்படை பயன்பாடாகும். அனைத்து வகை தொழிற்சாலைகளிலும் 'ஏர் கம்ப்ரசர்' சாதனம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேவைகள் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் நிலையான ஸ்பீடு கம்ப்ரசர்களையே பயன்படுத்துகின்றன. அவை, தேவைகள் குறைந்த போதிலும், ஒரே மாதிரியான உற்பத்தியை தொடர்ந்து வழங்குகின்றன.
உங்கள் நிறுவன தயாரிப்பின் புதுமை என்ன?
தற்போது, ஏர் கம்ப்ர சரில் , 'டிமான்ட் -மேட்ச்' தொழில்நுட்பத்தை, அறிமுகம் செய்துள்ளோம். இது இவ்வகை இயந்திரங்களுக்கு நுண்ணறிவை அளிக்கிறது. தானாகவே உடனடி தேவைக்கு ஏற்ப வினியோகத்தை சீரமைத்து, வாடிக்கையாளருக்கு மின்சார செலவை குறைக்கும். கூடுதல் செலவு இன்றி இயந்திர திறனையும், ஆயுளையும் மேம்படுத்தும். அதிகபட்சம், 17 சதவீதம் வரை மின்சார செலவை இது குறைக்கிறது.