/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் பயணம்
/
1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் பயணம்
1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் பயணம்
1,300 ராம பக்தர்களுடன் அயோத்திக்கு கணபதி சச்சிதானந்த சுவாமிகள் பயணம்
ADDED : டிச 23, 2025 06:58 AM

மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நேற்று அயோத்திக்கு ரயிலில் புறப்பட்டார்.
பயணத்துக்கு முன் அவர் அளித்த பேட்டி:
அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், தத்த பீடத்திற்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகா சார்பில் தத்த பீடத்தின் கிளையை அங்கு திறக்கவும், சிலையை நிறுவவும் செல்கிறேன்.
கர்நாடக மாநிலம் ஹனுமனின் பூமி. ஹம்பியின் கிஷ்கிந்தாவில் ஹனுமன் அவதாரம் எடுத்த இடம் உள்ளது. எனவே, ராமருக்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. அதேநேரத்தில் அயோத்தியில் கட்டப்பட்ட பாலராமரின் அற்புதமான சிலையை நம் மைசூரு சிற்பியும், ஆசிரமத்தின் பக்தருமான அருண் யோகிராஜ் செதுக்கியது நமக்கு பெருமை.
அயோத்தியில் தத்த பீடம் நடத்தும் நிகழ்ச்சியில், 'ராம பரிவார்' சிலை நிறுவப்படும். அப்போது ராம தாரக யக்ஞம் நடக்கும். இதில், 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். லட்சகணக்கான மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மைசூரில் 1,300 பக்தர்களுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் ரயிலில் பயணம் செய்வது இதுவே முதல் முறை. ஹைதராபாத்திலும் பக்தர்கள் எங்களுடன் இணைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், ஆசிரமத்தின் ஸ்ரீ தத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகள், கொடியசைத்து ரயிலை துவக்கி வைத்தார். அப்போது சாமராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா உடன் இருந்தார்.

