ADDED : டிச 23, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகாவின் அரஷனகி கிராமத்தில் வசித்தவர் ரம்ஜான் அலி, 30. இவரது மனைவி ஹசீனா பேகம், 25. தம்பதி, பணி நிமித்தமாக நேற்று காலையில், தேவதுர்காவுக்கு பைக்கில் வந்தனர். பணி முடிந்த பின், ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
தேவதுர்கா புறநகரின், நகரகுன்டா கிராமம் அருகில் செல்லும் போது, பின்னாலிருந்து அதிவே கமாக வந்த டிராக்டர், பைக் மீது மோதியது.
இதில் பலத்த காய மடைந்த ஹசீனா பேகம், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது கணவர் ரம்ஜான் அலி, மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

