/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திரையரங்கில் தீ விபத்து லட்சக்கணக்கில் சேதம்
/
திரையரங்கில் தீ விபத்து லட்சக்கணக்கில் சேதம்
ADDED : டிச 23, 2025 06:58 AM
கதக்: கதக் நகரின் பிரபலமான திரையரங்கில், தீப்பிடித்து எரிந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
கதக் நகரில் 'சாந்தி' திரையரங்கு உள்ளது. இது மிகவும் பிரபலமான திரையரங்காகும். நேற்று காலையில் திரைப்பட காட்சியை துவக்க ஊழியர்கள் தயாராகி வந்த நிலையில், திரையரங்கில் தீப்பிடித்தது. இதை பார்த்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.
சில நிமிடங்களில் தீ, மளமளவென பரவியது. ஊழியர்கள் வெளியே ஓடி வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் திரையரங்கில் இருந்த இருக்கைகள், உபகரணங்கள், ஸ்பீக்கர் உட்பட, அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி, பக்கத்து கட்டடங்களுக்கு, தீ பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, தீயணைப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தை பெடகேரி போலீசார் நேரில் பார்வையிட்டனர்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

