/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குக்கே கோவில் விழா சபாநாயகருக்கு எதிர்ப்பு
/
குக்கே கோவில் விழா சபாநாயகருக்கு எதிர்ப்பு
ADDED : டிச 23, 2025 06:57 AM
மங்களூரு: குக்கே சுப்பிரமணியா கோவில் விழாவுக்கு, சபாநாயகர் காதரை அழைத்தற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தட்சிண கன்னடாவின் குக்கே கிராமத்தில் குக்கே சுப்பிரமணியா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நான்கு நாட்கள் நடக்கும் கிருஷ்டி மஹோத்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதில் கலந்து கொள்ள, கர்நாடக சட்டசபை சபாநாயகர் காதர், காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா, கடலோர மேம்பாட்டு ஆணைய தலைவர் கபுர், கொங்கனி சாகித்ய அகாடமியின் ஜோச்சிம், சார்லட் பின்டோ ஆகியோருக்கு, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்து இருந்தது.
ஹிந்து கோவில் விழாவுக்கு, வேறு மதங்களை சேர்ந்த தலைவர்களை அழைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. கோவில் பாதுகாப்பு குழுவினர், குக்கே சுப்பிரமணியா கோவில் நிர்வாக அறை முன்பு நேற்று போராட்டம் நடத்தினர்.
காதர் உள்ளிட்டோருக்கான அழைப்பை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அவர்களிடம் கோவில் நிர்வாகம், பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.

