டிசம்பர் 2026ல் எந்ததெந்த படங்கள் வருகிறது….
2026ம் ஆண்டின் 11வது மாதமான நவம்பர் 27ம் தேதியான நேற்றுடன் வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 50 படங்கள் குறைவு.
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு மாதமே உள்ளது. அதில் நான்கு வெள்ளிக் கிழமைகள் உள்ளன. இந்த நான்கு வாரங்களில் 15 முதல் 20 படங்கள் வரை வெளியாகும் எனத் தெரிகிறது.
அடுத்த வாரம் டிசம்பர் 4ம் தேதி, “சேரநாட்டு யானை தந்தம், ஹலோ காதல், பீட்சா பாய்ஸ், டிரெய்ன்” ஆகிய படங்களும், டிசம்பர் 11ம் தேதி 'அறிவு, அரிகொம்பன், க்ளிக், டீலக்ஸ், மிஸ்டர் பாரத்” ஆகிய படங்களும், டிசம்பர் 18ம் தேதி ‛விசாரணை கைதி, நவோரியா', டிசம்பர் 24ம் தேதி 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை, மூன்வாக், ராவடி, தகப்பன்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளதாக தேதியுடன் குறிப்பிட்டு அறிவித்துள்ளார்கள்.
டிசம்பர் வெளியீடு என “லவ் பைட், வேட்ட சாமி, இரண்டு வானம்” ஆகிய படங்களும் இந்த வெளியீட்டுப் பட்டியலில் உள்ளன.
இவை தவிர சில படங்கள் திடீரென களத்தில் வந்து குதிக்கலாம். வருடத்தின் மாதக் கடைசியில் எப்போதுமே கூடுதலாக வெளியாவது வழக்கம். டிசம்பரில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வர வாய்ப்புள்ளது. அப்படியே வந்தாலும கடந்த வருடம் போல 280 என்ற எண்ணிக்கையத் தாண்ட வாய்ப்பில்லை. 220 முதல் 230 படங்களுடன் இந்த வருட எண்ணிக்கை முடியலாம்.