உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ?

இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அப்யங்கர் இசையமைப்பில், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'ஓ.ம்'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திங்கள் கிழமையன்று வெளியான இந்த அறிவிப்புக்குப் பிறகு வேறு வசூல் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துள்ள இந்தப் படம் தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்து விட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

உலக அளவில் இந்தப் படத்திற்கு 50 கோடிக்கும் அதிகமாக தியேட்டர் உரிமை விற்கப்பட்டுள்ளது. 100 கோடி வசூலைக் கடந்து 50 கோடிக்கும் சற்றே அதிகமான பங்குத் தொகையைக் கொடுத்துள்ளது. இன்னும் 5 கோடி கூடுதலாக பங்குத் தொகை வந்தால் இப்படம் லாபத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு மாநிலங்கள், கேரளாவில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'அமரன்' படம் பேசப்பட்டது போல இந்த 'ஓம்' படம் பேசப்படவில்லை. இரண்டாவது பாதியில் இருந்த திரைக்கதையே அதற்குக் காரணம் என்பது விமர்சகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-11-27 15:24:52

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி க்கு ஃபுல் freedom கொடுத்து இருந்தால் அவர் இன்னொரு Amara காவியம் கொடுத்து இருப்பார்.. எல்லாம் தெரிந்த egaathipadhi mookai எல்லா விஷயங்களிலும் விட்டு இருப்பார்அதான் புஸ்ஸ்ஸ் னு பிடுங்கி கிட்டு poidichi.. Audio function la RP மூஞ்சி ஒன்னும் சரி இல்லை. Uncle மம்முக்கா indirect aa sonnar எதுக்கு டா என்னை இந்த படத்தில் நடிக்க koppiteenga nu..