உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர்

பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர்

பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் ஸ்பிரிட் படம் உருவாகி வருகிறது. வருகிற டிசம்பர் 13ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்பிரிட் படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா.

அவர் கூறுகையில், ‛‛நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புதான் ஸ்பிரிட் படத்தின் சில காட்சிகளை எடிட் செய்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருப்பவர், பாகுபலி 2 மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஸ்பிரிட் படம் பிரபாஸின் ஸ்டார்டமை மீண்டும் மாற்றியமைக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தீபாவளியன்று ஸ்பிரிட் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பிரபாஸ் நடிப்பில் பெளசி படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். பிரபாஸ் இதில் ஒரு அதிரடியான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !