உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவில் முதல் 20 படங்களின் பட்டியலில் ராமாயணா

ஆஸ்கர் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவில் முதல் 20 படங்களின் பட்டியலில் ராமாயணா

பாலிவுட்டின் பிரம்மாண்ட படமான ராமாயணா 99-வது ஆஸ்கர் விருதுகளின் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவுக்கான முதல் 20 திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்து மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் ட்யூன்: பார்ட் த்ரீ, தி ஒடிஸி, அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே மற்றும் புராஜெக்ட் ஹெயில் மேரி ஆகிய ஹாலிவுட் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்துள்ளது.

இந்தப் படங்கள் ஆஸ்கர் பிரிவுக்கான அடுத்தகட்ட வாக்கெடுப்பிற்கு முன்னேறியுள்ளன. இறுதிப் பரிந்துரைப் பட்டியலிலும் இப்படம் இடம்பிடித்தால், அது இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

முன்னதாக, ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படமும் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவில் முதல் 20 படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருந்தது. ஆனால் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் அதனால் இடம்பெற முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே ராமாயணா ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாக முன்னிறுத்தப்பட்டு வருவதால், இந்தக் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் இப்படம் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !