உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கரை நோக்கி அடுத்த கட்ட நகர்வு : தகுதி பட்டியலில் 'கோந்தல்'

ஆஸ்கரை நோக்கி அடுத்த கட்ட நகர்வு : தகுதி பட்டியலில் 'கோந்தல்'

சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான மராட்டிய படம் 'கோந்தல்'. இப்படத்தில் இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி, நிஷாத் போயிர் மற்றும் அனுஜ் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படம் மகாராஷ்டிராவின் பாரம்பரியமான 'கோந்தல்' என்ற நாட்டுப்புறச் சடங்குகளை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதை இப்படம் பெற்றது. தற்போது கோந்தல்' இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது.

இந்த நிலையில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவின் ஆஸ்கர் விருது போட்டிக்கான தகுதி பட்டியலை அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நேற்று வெளியிட்டது. இதில் 'கோந்தல்' படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 104 படங்கள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !