உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிங் : கரீனா கபூரின் சிறப்புப் பாடல் நாளை வெளியாகிறது

கிங் : கரீனா கபூரின் சிறப்புப் பாடல் நாளை வெளியாகிறது

ஹிந்தியில் ஷாருக்கான் நடித்துள்ள அதிரடி கேங்ஸ்டர் படம் கிங். இப்படத்தை வார், பதான் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் சுஹானா கான் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள, டாடி கூல் என்ற பாடலில் ஷாரூக்கானுடன் இணைந்து கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்பாடல் நவம்பர் 25-ஆம் தேதியான நாளை வெளியாக உள்ளது. ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடலில், கரீனா கபூர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடனமாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. சச்சின்-ஜிகர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, அனில் கபூர், ஜாக்கி ஷெராப், ஜெய்தீப் அஹ்லாவத், அர்ஷத் வர்சி மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !