உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனது குடும்பத்திற்காக போராளியாக மாறுவேன் : எல்லை மீறுபவர்களுக்கு ராஷ்மிகா எச்சரிக்கை

எனது குடும்பத்திற்காக போராளியாக மாறுவேன் : எல்லை மீறுபவர்களுக்கு ராஷ்மிகா எச்சரிக்கை

நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை பல வருடங்கள் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரான கரண் ஜோஹர் நடத்தி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் கலந்து கொண்டனர்.

அதில் பல விஷயங்களை வெள்ளந்தியாக வெளிப்படையாக பேசினார் ராஷ்மிகா. குறிப்பாக ஓராண்டு காலம் தினமும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜய் தேவரகொண்டாவிடம் தான் கேட்டுக்கொண்டே இருந்ததாக ராஷ்மிகா கூறியது சோசியல் மீடியாவில் அதிக கவனத்தை ஈர்த்ததுடன் விமர்சனங்களையும் பெற்றது.. குறிப்பாக இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிக அளவில் வந்தன.

இதனைத் தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கொந்தளித்த ராஷ்மிகா, “ எனது குடும்பத்தைப் பற்றி யாராவது பேசினால் எனக்கு பிடிக்காது.. என் குடும்பத்திற்காக நான் முழு போராளி அவதாரத்திற்கு மாறிவிடுவேன். சொல்லப்போனால் மைசாவாக மாறிவிடுவேன். எனது குடும்பத்தினர் இந்த துறையை தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் பொது நபர்கள் அல்ல. எனது தொழிலுக்காக உறவினர்களும் நண்பர்களும் தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !