பிரேம்குமார் - பஹத் பாசில் பட தலைப்பு ‛அசரீரி' : ஜன., 1ல் படம் ரிலீஸ்
ADDED : 4 hours ago
‛96, மெய்யழகன்' படங்களின் இயக்குனர் பிரேம் குமார் தற்போது நடிகர் பஹத் பாசிலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷிவதா நாயர், ஹரிஷ் உத்தமன், தேவதர்ஷினி சேத்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மான்சூன் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். படத்திற்கு ‛அசரீரி' என பெயரிட்டுள்ளனர். அதோடு படம் வருகிறது புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.