‛அரசன்'-ல் அனிருத் விலகலா : தயாரிப்பாளர் தாணு பதில்
ADDED : 15 minutes ago
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அரசன்'. வெற்றிமாறன் இயக்க, பிரியங்கா மோகன், யோகலட்சுமி, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வட சென்னை பின்னணியில் இதன் படப்பிடிப்பு உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கொஞ்சம் மெதுவாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‛பயர் பாடல்' வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது. அனிருத் இசையமைக்கவில்லை, அவர் விலகிவிட்டார் என செய்தி வந்தது. இதுபற்றி தயாரிப்பாளர் தாணு கூறுகையில், ‛‛யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. விரைவில் அரசன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. பயர் பாடல் விமர்சிக்கப்படுவதாக சொல்கிறீர்கள். ஆனால் அது டிரெண்டிங்கில் உள்ளது. அனிருத்தையும், அரசனையும் பிரிக்க முடியாது'' என்றார்.