பெண் போராளியாக நடிக்கும் இனியா
வாகைசூடவா, யுத்தம் செய், மவுனகுரு, அம்மாவின் கைபேசி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் இனியா. ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறையவே இரண்டாவது நாயகி, பல நாயகிகளில் ஒருவர், குணசித்தர வேடம் என கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார். கடைசியாக 'மூக்குத்தி அம்மன் 2'ம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அவர் முதன்மை நாயகியாக நடிக்கும் படம் 'வன்னி'. இதனை செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் மற்றும் சுக்கிரன் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்து, இயக்குகிறார். கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, சாய் ரத்னா, பிரியங்கா தினேஷ், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். வாகீசன் ராசைய்யா இசை அமைக்கிறார்
பெண் போராளியின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தையும், பெண்களின் உரிமைகளையும் பேசும் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு இலங்கை, நாகப்பட்டினம், பூம்புகார், மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.